Latest News
Saturday, August 10, 2013

தமிழகத்தில் சக்கைபோடு போடும் சென்னை எக்ஸ்பிரஸ்

ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் உலகெங்கும் பாக்ஸ் ஆபீசில் ஒரே நாளில் ரூ 30 கோடியைக் குவித்துள்ளது. இது சல்மான்கானின் ஏக் தா டைகர் படவசூலை விட அதிகமாகும்.

இதற்கு முன் எந்த ஹிந்திப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பும் வசூலும் தமிழகத்தில் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. பிரமாண்ட தமிழ்ப் படத்துக்கு நிகரான வசூலை சென்னை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாரூக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில், ரேஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் ரமழான் ஸ்பெஷலாக நேற்று உலகமெங்கும் வெளியானது.

இந்தப் படம் கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப் படமே எனும் அளவுக்கு லொகோஷன்கள்,வசனங்கள், காட்சி அமைப்புகள், நடிகர்கள் என அனைத்திலும் தமிழின் ஆதிக்கம் நிறைந்துள்ளது.

சத்யராஜ் உள்பட ஏராளமான தமிழ் நடிகர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். கதாநாயகி தீபிகா தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளதோடு, தனக்கான தமிழ் வசனங்களை தானே டப்பிங் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. வெளியான அனைத்து இடங்களிலுமே இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு பொழுதுபோக்குப் படம் இப்படித்தான் ஜாலியாக இருக்க வேண்டும் என இரசிகர்கள் கூறுமளவுக்கு வந்துள்ளது படம்.

படத்தின் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்றி கூறும் இந்தப் படத்தின், இறுதியில் ரஜினிக்கு மரியாதை செய்யும் விதத்தில் இடம்பெற்றுள்ள லுங்கி டான்ஸ் பாடல் அனைவரையும் இறுதி நிமிடம் வரை உட்கார வைத்து விடுகிறது.

ரஜினி படத்துக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் இரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழகத்தில் சக்கைபோடு போடும் சென்னை எக்ஸ்பிரஸ் Rating: 5 Reviewed By: gg