Latest News
Wednesday, August 14, 2013

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய் -பரிதாப ஸ்டன்ட் கலைஞர்!

பின்வரும் செய்தியை படிக்கிறவர்கள், விஜய்யை புகழ்ந்து சூர்யாவை இகழ்ந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. சம்பந்தப்பட்ட இருவரும்தான் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்ள விழைகிறோம்.

முதலில் ஒரு ஃபிளாஷ்பேக். சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு... கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து வில்லனை அலேக்காக வீச வேண்டும் சூர்யா. ஹரியின் 12 படங்களிலும் அடியாளமாக நடித்திருக்கும் ரஞ்சன் என்பவர் சூர்யாவிடம் அடிவாங்க தயாராக இருக்கிறார். நினைத்தபடியே சூர்யா ரஞ்சனை பலம் கொண்ட மட்டும் தாக்க, எகிறி குதித்து கடலில் விழுகிறார் ரஞ்சன். ஆனால் கொஞ்சம் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறையில் விழுகிறார். முழங்காலில் சரியான அடி. வலிதாங்க முடியாமல் அலறும் அவரை அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இனி நடக்கவே முடியாது என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறார் ரஞ்சன். (ப்ளாஷ்பேக் நிறைவடைகிறது)

மருத்துவமனையில் அனுமதித்ததோடு சரி. அதற்கப்புறம் ஒரு காக்காய் நரி கூட சீண்டவில்லையாம் ரஞ்சனை. இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் ரஞ்சனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரிக்க, ஒரு தடவ சூர்யா சார் வந்துட்டு நல்லாயிருக்கியான்னு கேட்டுட்டு போனாரு. அதோட சரி. யாருமே பார்கல. பண உதவியும் பண்ணல சார்... என்று புலம்புகிறார் ரஞ்சன்.

இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் இவருக்கு மருத்துவ உதவி அளித்துவிட்டு சென்னைக்கே வந்து சூர்யாவையும் ஹரியையும் பார்த்து ரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்ல, நான் ஒன்றும் செய்ய முடியாதே என்றாராம் சூர்யா. ஹரியோ, ஜாக்கிரதையா ஃபைட் பண்ணலன்னா இப்படிதான் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாராம். சரி... இதில் விஜய் எங்கே வந்தார்?

இப்படியும் மனிதர்களா என்று ஆச்சர்யப்பட்ட இன்ஸ், சென்னையில் ஜில்லா படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டு அங்கே போனாராம். விஜய்யை சந்தித்து முழு கதையையும் சொல்ல, 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும், இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களையும் ரஞ்சன் வீட்டுக்கு தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினாராம் விஜய்.

மிச்சசொச்ச கருத்துக்களை இங்க எழுதுங்க தோழர்களே...

  • Blogger Comments
  • Facebook Comments

2 comments:

Item Reviewed: கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய் -பரிதாப ஸ்டன்ட் கலைஞர்! Rating: 5 Reviewed By: gg