Latest News
Sunday, August 11, 2013

பிரபுதேவாவுடன் இணையும் ஶ்ரீதேவி?

நடிகர் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்க சீனியர் நடிகை
ஸ்ரீதேவி ஒப்பந்தமாகி இருப்பதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் கொடி கட்டிப் பறந்துவிட்டு அப்படியே பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தார். தற்போது பிரபுதேவாவின் படத்திலும் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இது பற்றி ஸ்ரீதேவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நிறைய கதைகளைக் கேட்டு வருகிறேன். பிரபுதேவா எனக்குப் பிடித்தமான நடனக் கலைஞர், நடிகர், இயக்குநர்.

அப்படி ஒரு வாய்ப்பு அமையுமானால் நிச்சயம் நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். விரைவில் என்னுடைய அடுத்த படம் பற்றி தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பிரபுதேவாவுடன் இணையும் ஶ்ரீதேவி? Rating: 5 Reviewed By: gg