இன்னும் கொஞ்ச காலம்தான். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் புதிய கட்சியும் போட்டியிடும் சூழல் வரலாம் என்கிறது சில ரகசிய தகவல்கள். அதற்கான மூவ்களை மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்கிறாராம் அவரும்.
சிங்கம் உறங்கப் போகும் நேரம் பார்த்து இந்த 'புலி' கர்ஜிக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். யார் சிங்கம்? யார் புலி? சினிமா புலியெல்லாம் அரசியலில் புலியாகிவிடுமா? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தாலும், விஜய்யின் செயல்பாடுகள் மட்டும், அரசியல் கன்பார்ம்டா என்கிறது.
புதிய கட்சி துவங்கிய சில மாதங்களுக்கு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊருக்கு கொடியேற்றும் திட்டத்திலிருக்கிறாராம் அவரும். இந்த நேரத்தில்தான் கட்சிக்கு இன்னும் பலம் சேர்க்க நன்கு பேசத் தெரிந்த லட்சக்கணக்கான மக்களை கூட்டக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பேச்சாளர், முக வசீகரமுடையவர் தேவை என்று நினைக்கிறதாம் அவர் மனசு.
அதற்கு சரியான சாய்ஸ் டி.ராஜேந்தர்தான் என்பது விஜய்யின் எண்ணமாகவும், அவரது அப்பாவின் திட்டமாகவும் இருக்கிறதாம். அதனால்தான் வலியப் போய் சிம்புவின் வாலு படம் வெளியாவதற்கு சுமார் 7 கோடி வரை பண உதவி செய்ததாக கூறுகிறார்கள் திரையுலகத்தில்.
விஜய் கட்சி ஆரம்பிக்கிற நேரத்தில் வெளிப்படையாக உள்ளே வரும் டிஆருக்கு கட்சியின் தலைமை பொறுப்பில் முக்கியமான ஒரு இடம் வழங்கப்படவும் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
திமுக வில் செல்வாக்காக இருந்த டிஆர் அதற்கப்புறம் மெல்ல மெல்ல தனது கார சாரத்தை இழந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறொன்றுமில்லை
0 comments:
Post a Comment