இனிப்பு மிகுந்த திண்பண்டங்கள் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் குறைவு. வணிக சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு இனிப்பை வாரி வாரி உணவு பதார்த்தங்களில் சேர்த்து வியாபாரமாக்குகின்றனர் .ஆனால் அதிலுள்ள ஆபத்து எத்தனை பேருக்கு புரியும்?
ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரையானது மிகவும் இனிப்பானது.ஆனால் அது மூளையில் உள்ள ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆபத்தான நோய்களை உண்டாக்குகிறது.
சர்க்கரை வியாதி தொடங்கி இதய நோய்கள் வரை மற்றும் குணப்படுத்தவே முடியாத முடக்கும் நோய்களான அல்ஸைமர் நோயில் தொடங்கி ஹைபர் ஆக்டிவ் வரை சகலத்திற்கும் இந்த ஃப்ரக்டோஸே காரணம் என்ற குண்டை தூக்கிப் போடுகிறார்கள் The UCLA விஞ்ஞானிகள்.
பயப்படாதீர்கள், நமது உடல் விந்தையானது. நாம் எத்தனை கெடுதல் உடலுக்கு தந்தாலும் அவை அதிகபட்சம் தன்னைத்தானே சரிபடுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது.அப்படிதான் இந்த சர்க்கரை விஷயத்திலும்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்( omega-3 fatty acid ) அல்லது DHA எனப்படும் கொழுப்பு அமிலம் , நம் உடலுக்கு மிகவும் நன்மை செய்யக் கூடியது. அவை ஃப்ரக்டோஸ் சர்க்கரையால் பாதிக்கும் மூளையின் ஜீன்களை மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியினை செய்கிறது. இது மிகவும் ஆறுதல் தரக் கூடிய விஷயம்.
இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நமது மூளையிலேயே சிறிய அளவு சுரக்கிறது. ஆனால் அந்த அளவு போதுமானதில்லை. ஆகவே அவற்றை உணவு மூலம் எடுத்துக் கொள்ளலாம்.மீ ன் வகைகளில் குறிப்பாக சால்மன் மீன் வகைகளில் இந்த கொழுப்பு அமிலம் மிக அதிகமாக காணப்படுகிறது. அதோடு, வால்நட், பழவகைகள், காய்கறிகளிலும் அதிகமாய் இந்த சத்து உள்ளது. அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
மூளையில் காணப்படும் 900 ஜீன்களில் Bgn மற்றும் Fmod ஆகிய இரு ஜீன்கள் ஃப்ரக்டோஸ் சர்க்கரையால் பாதிப்பிற்குள்ளாகிறது. இந்த இரு ஜீன்களும் மாற்றமடைந்தால், அவை மற்ற ஜீன்களையும் மாற்றத்திற்குள்ளாக்குகிறது. ஆகவே மருத்துவ துறையில், பாதிப்புக்குள்ளாகும் இந்த இரு ஜீன்களுக்கு உண்டான மருந்துக்களை கண்டுபிடிக்க தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கட்டுரையை விரிவாக EBioMedicine இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
http://ift.tt/1NYU01d
0 comments:
Post a Comment