நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன் முறையாக முழு நேர நகைச்சுவைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளார். தசவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கேரக்டரை போன்ற ஒரு படம் என்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக விருந்தாக இருக்கும். இப்படத்திற்கு இளையராஜா 'சபாஷ் நாயுடு' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இப்படத்தின் படபூஜை நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. படத்துக்கு பெயர் வைத்த இளையராஜா 'நீடுழி வாழ வேண்டும்' என கமல்ஹாசனை வாழ்த்தினார். கமல்ஹாசன்-இளையராஜா இருவரும் 11 ஆண்டுகள் கழித்து 'சபாஷ் நாயுடு' படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் நடிகர் சங்கத்திற்கு 1 கோடி நிதி வழங்கியது. லைக்கா நிதி வழங்கிய பின் 'நடிகர் சங்கம் கட்டுவதற்கு இவ்வளவு விரைவாக 1 கோடி நிதி கிடைக்க நீங்கள் தான் காரணம்' என்று கமல்ஹாசனின் காலில் விழுந்து விஷால் வணங்கினார்.
நடிகர் சங்க வளாகத்தில் படபூஜையைத் தொடங்கிய கமல்ஹாசன் 2.5 லட்சத்தை வாடகையாக நடிகர் சங்கத்திற்கு வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசும்போது "விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. இருவரும் எங்களது சகோதர்கள் தான்.
நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு நான் அட்வைஸ் செய்யமாட்டேன். நட்சத்திர கிரிக்கெட்டுக்கு இருவரும் வராததுக்கு காரணம் இருக்கலாம். சட்டமன்றத் தேர்தலில் என் ரசிகர்கள் அவரவர் விருப்படி ஓட்டு போடணும். எனக்கு கடந்த தேர்தலில் ஓட்டு இல்லை. இந்த முறை எப்படி என்று தெரியவில்லை" என்று பேசினார்.
0 comments:
Post a Comment