Latest News
Saturday, May 21, 2016

உடற்பயிற்சிக்கு பின் செய்யும் இந்த தவறுகள் தான் தசைகளை வளரவிடாமல் செய்கிறது என தெரியுமா?

என்ன தான் மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும், உங்கள் தசைகளில் எந்த ஒரு வளர்ச்சியும் தென்படவில்லையா? வெறும் உடற்பயிற்சியை செய்தால் மட்டும் ஒருவரின் தசைகள் வளர்ச்சிப் பெறாது. அதற்கு பின் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் தான் தசைகளில் வளர்ச்சியைக் காண முடியும்.

ஆனால், நம்மில் பலர் தசைகள் நன்கு வளர்வதற்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின், ஒருசில தவறுகளை செய்து வருகின்றனர். அதனால் தான் அவர்களுக்கு தசைகளில் வளர்ச்சியைக் காண முடியவில்லை. இங்கு தசைகளின் வளர்ச்சியில் இடையூறை உண்டாக்கும், உடற்பயிற்சிக்கு பின் நாம் செய்யும் சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தாமதமாக உணவு உட்கொள்வது

உடற்பயிற்சி செய்து முடித்து வீட்டிற்கு வந்ததும் 1 மணிநேரத்திற்குள் உணவை உட்கொள்ள வேண்டும். தற்போது பலரும் மாலையில் ஜிம் செல்வதால், சீக்கிரமே உணவை உட்கொண்டு விட வேண்டும். தாமதமாக உட்கொண்டால், அதனால் எவ்வித பலனும் கிடைக்காது.

உடற்பயிற்சிக்கு பின் மது

ஜிம் முடிந்து வீட்டிற்கு வந்த பின் மது அருந்தினால், நீங்கள் ஜிம்மில் செலவழித்த நேரம் முழுவதையும் வீணாக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் மது அருந்தினால், அது புரத சேர்க்கையைக் குறைத்துவிடும். அதிலும் மது அருந்திக் கொண்டே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதனால் தசைகளின் மீட்பு குறையும்.

ஸ்போர்ட்ஸ் பானங்கள் பருகுவது

சர்க்கரை கலக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பானங்கள் எலக்ட்ரோலைட்டுக்களை நிரப்ப உதவுமே தவிர, அதில் கலோரிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே ஸ்போர்ட்ஸ் பானங்களைப் பருகுவதைத் தவிர்த்த, இளநீர் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடியுங்கள்.

சப்ளிமண்ட்டுகளை எடுப்பது

தசைகளின் வளர்ச்சிக்கு ஏராளமான சப்ளிமண்ட்டுகளான புரோட்டீன் பவுடர்கள் ஜிம்மிலேயே விற்கப்படுகிறது. இப்படி சப்ளிமண்ட்டுகளை எடுத்தால், அதனால் பிற்காலத்தில் மோசமான விளைவைத் தான் சந்திக்கக்கூடும். எனவே முடிந்த வரையில் உணவுகளின் மூலம் புரோட்டீனைப் பெற முயற்சி செய்யுங்கள்.

ஸ்ட்ரெட்சிங் செய்யாமல் இருப்பது

ஸ்ட்ரெட்சிங் செய்வதால், தசைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவது அதிகரிக்கப்படுவதோடு, இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் தசைகளில் காயங்கள் குறையக்கூடும். மேலும் நல்ல நெகிழ்வுத்தன்மை மற்றும் நல்ல நிலையைப் பெற உதவி புரியும். ஆகவே எப்போதும் உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஸ்ட்ரெட்சிங் செய்ய மறக்காதீர்கள்.

அளவான தூக்கத்தை மேற்கொள்வது

ஒரு நாளில் தசைகள் இரு முறை வளர்ச்சிப் பெறும். ஒன்று தூங்கும் போது, மற்றொன்று உடற்பயிற்சிக்கு பின். உடற்பயிற்சி செய்த பின் ஒருவர் போதிய அளவு தூக்கத்தை மேற்கொண்டால், தசைகளில் புரத சேர்க்கை அதிகரித்து, வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Let's block ads! (Why?)



http://ift.tt/1YKPF7S
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: உடற்பயிற்சிக்கு பின் செய்யும் இந்த தவறுகள் தான் தசைகளை வளரவிடாமல் செய்கிறது என தெரியுமா? Rating: 5 Reviewed By: Unknown