Latest News
Wednesday, April 30, 2025

ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம் - புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகள்

பழைய 2022 மாடலில் சார்​ஜிங் வசதிக்​காக இடம்​பெற்​றிருந்த ‘டைப்​-ஏ’ யுஎஸ்பி தற்​போது மாற்​றப்​பட்டு 27 வாட்​ஸுடன் கூடிய ‘டைப்​-சி’ போர்ட்​டாக மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சென்னை: புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட் உள்​ளிட்ட நவீன வசதி​களு​டன் ராயல் என்​பீல்ட் நிறு​வனம் புதிய புல்​லட் ‘ஹண்​டர் 350’ மாடலை அறி​முகம் செய்​துள்​ளது.

ராயல் என்​பீல்ட் நிறு​வனத்​தின் கிளாசிக் 350, மீட்​டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்​கள் வாகன ஓட்​டிகளிடம் கவனம் பெற்ற நிலை​யில், அதன் தொடர்ச்​சி​யாக ‘ஹண்​டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்​து, அதன் மேம்​படுத்​தப்​பட்ட மாடல் வகை நேற்று முன்​தினம் டெல்லி மற்​றும் மும்​பை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. டேப்​பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளு​டன் புதி​தாக டோக்​கியோ பிளாக், லண்​டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்​களில் 2025-ம் ஆண்​டின் ‘ஹண்​டர் 350’ அறி​முக​மாகி​யுள்​ளது. புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழி​காட்​டும் டிரிப்​பர் என பல்​வேறு நவீன வசதி​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ராயல் என்பீல்ட் ‘ஹண்டர் 350’ புதிய மாடல் அறிமுகம் - புதிய சஸ்பென்சன், எல்இடி லைட் உள்ளிட்ட நவீன வசதிகள் Rating: 5 Reviewed By: gg