Latest News
Thursday, May 1, 2025

``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா

{"props":{"height":705,"medium":"image","url":"https://gumlet.vikatan.com/vikatan/2025-03-05/j2wbusff/Screenshot-2025-03-05-145926.png","width":758},"value":null,"media:title":{"props":{"type":"html"},"value":"சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில் என்ன?"},"media:description":{"props":{"type":"html"},"value":"சீனா பற்றிய கேள்விக்கு ட்ரம்ப் பதில் என்ன?"}}

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.

'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது.

நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம், "பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், சீனாவை சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும்" என்று கண்டிஷன் போட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தம்

இந்தநிலையில், நேற்று, இத்தாலி அதிபர் மெலோனி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "சீனா உடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் போடப் போகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

"எந்த நாடும்..." - டொனால்டு ட்ரம்ப்

யாரும் போட்டியிட முடியாது

மேலும், 'சீனா அமெரிக்காவை பேச்சுவார்த்தைக்காக பலமுறை அணுகியது' என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவுடன் நெருக்கம் ஆகிறதே... இதனால் வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை. எந்த நாடும் அமெரிக்கா உடன் போட்டியிட முடியாது" என்று பதில் சொல்லியுள்ளார்.

சீனா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது. சீனா உடன் விரைவில் நல்ல ஒப்பந்தம் போடப்படும் என்று கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா Rating: 5 Reviewed By: gg