Latest News
Tuesday, July 1, 2025

``ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" - ஈரான் போர் நிறுத்தம் குறித்து எம்.பி சஞ்சய் ராவத்

{"props":{"height":675,"medium":"image","url":"https://gumlet.vikatan.com/vikatan/2025-06-24/9zyz29nv/Sanjay-Raut.jfif","width":1200},"value":null,"media:title":{"props":{"type":"html"},"value":"Sanjay Raut"},"media:description":{"props":{"type":"html"},"value":"Sanjay Raut"}}

அணுஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய இஸ்ரேல் அதை தடுக்கப்போவதாக ஈரான் மீது போர் தொடுத்தது. இஸ்ரேலின் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது எனத் தெரிந்தும் இஸ்ரேலுக்கு உடனடியாக பதில் தாக்குதல் கொடுத்தது ஈரான். அப்போதே அமெரிக்காவையும் எச்சரித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் எனக் குறிப்பிடப்படும் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் கத்தாரின் அமெரிக்கா இராணுவத் தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனால் போர் மேகம் சூழ உலக நாடுகள் பரபரப்பானது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இனி அமெரிக்கா பதிலடி தராது என்றும், போர் நிறுத்தம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட ஈரான், இஸ்ரேலுடனான போரை நிறுத்துவதாக அறிவித்தது. எந்த சூழலிலும் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோன் என உறுதியாக நின்றது ஈரான். இதைக் குறிப்பிடும் வகையில் சிவசேனா (UBT) எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ``ஒரு நாட்டின் சுயமரியாதையும், தைரியமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஈரான் காட்டியுள்ளது. காஷ்மீர், பாகிஸ்தான் பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்சனையை இந்தியா எதிர்கொண்டபோதும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்ற நாடு. அந்த நாடு யாருக்கும் முன்பாக தலைவணங்கவில்லை. அதை ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ``ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" - ஈரான் போர் நிறுத்தம் குறித்து எம்.பி சஞ்சய் ராவத் Rating: 5 Reviewed By: gg