‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கியினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயனர்களின் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் தரவுகளை கொண்டு தங்களது ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களை கூட மெட்டா ஏஐ ஸ்கேன் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 comments:
Post a Comment