Latest News
Saturday, September 6, 2025

Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் பொழியும் ட்ரம்ப்

'அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது. உலகிலேயே அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் டாப் நாடு இந்தியா', 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணத்தை உக்ரைன் உடனான போருக்கு ரஷ்யா செலவிடுகிறது' என்று இந்தியாவைப் பொரிந்து தள்ளி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது பேச்சை மாற்றியுள்ளார்.

ட்ரம்பின் பாசமழை

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், "நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

நான் எப்போதுமே அவருக்கு நண்பர்தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.

எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு இருக்கும். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்" என்று பேசியுள்ளார்.

சீனா, ரஷ்யா உடன் இந்தியா நெருக்கமாகி வருவதும், ட்ரம்பின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் பொழியும் ட்ரம்ப் Rating: 5 Reviewed By: gg