Latest News
Wednesday, March 25, 2026

"நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவரிடம் பேசி வருகிறோம்" - ட்ரம்ப் சொல்லும் நபர் யார்? அவர் சொல்வது என்ன?

"இரண்டு நாள்களாக ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா அடுத்த 5 நாள்களுக்கு ஈரானைத் தாக்காது" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், நாங்கள் அமெரிக்கா உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுக்கிறது.

முகமது-பாகர் காலிபாஃப் | Mohammad Bagher Ghalibaf
முகமது-பாகர் காலிபாஃப் | Mohammad Bagher Ghalibaf

அமெரிக்கா பேசிக்கொண்டிருக்கும் அந்த நபர் யார்?

இந்தச் சமயத்தில்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப், ''நாங்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவராகிய ஒருவரிடம் பேசி வருகிறோம்" என்று ஈரான் பேச்சுவார்த்தை குறித்து கூறியிருந்தார்.

அந்த நபர் ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் என்று அமெரிக்காவில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன.

அவர் என்ன சொல்கிறார்?

ஆனால், இந்தத் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார் முகமது-பாகர் காலிபாஃப்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்கா உடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை ஏமாற்றவே இந்தப் போலி செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிக்கியுள்ள கடுமையான சூழல்களில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியும்".

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: "நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவரிடம் பேசி வருகிறோம்" - ட்ரம்ப் சொல்லும் நபர் யார்? அவர் சொல்வது என்ன? Rating: 5 Reviewed By: gg