Latest News
Saturday, March 28, 2026

ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.

ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.

மோடி பதிவு

இந்த உரையாடல் குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன் கால் வந்திருந்தது.

இருவரும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசினோம்.

இந்தியா போர் நிறுத்தத்தையும், அமைதியையும் ஆதரிக்கிறது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், அனைத்து நாடுகளும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உதவ தயார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

எலான் மஸ்க்..?

தற்போது நியூயார்க் டைம்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, 'ட்ரம்ப் - மோடி போன்காலின் போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் லைனில் இருந்திருக்கிறார்.

ஆனால், அவர் பேசினாரா... என்ன பேசினார் என்று தெரியவில்லை.

வெள்ளை மாளிகையில் உள்ள பெயர்‌ வெளியிடப்படாத இரண்டு அதிகாரிகள் இந்தத் தகவலை கூறியிருக்கின்றனர்.

ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது, அதெல்லாம் சரியாகி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம்‌ உறுதி செய்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்? Rating: 5 Reviewed By: gg