Latest News
Sunday, March 15, 2026

`என்னதிது.?' போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி?

மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் என்று தான் இருந்து வருகிறது.

ஆனால், அந்தப் போர் நடக்கும் பிராந்தியமான இஸ்ரேல், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் பங்குச்சந்தை எப்படி இருக்கிறது என்பதைக் கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"அபுதாபி, துபாய், ஓமன், குவைத் போன்ற நாடுகள் ஏதோ ஒரு வகையில் ஈரான் போரின் தாக்கத்தைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் சந்தைகள் பெரியளவில் சரிவுகளைச் சந்திக்கவில்லை.

நேற்றைய தின நிலவரத்தின் படி, அபுதாபி சந்தை (ADX General) வெறும் 133 புள்ளிகள் மட்டுமே இறங்கியுள்ளது. ஒரு மாதத் தரவுகளை எடுத்துப் பார்த்தாலும், 7 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது.

இஸ்ரேல் சந்தை (Tel Aviv 125 Index) நேற்று 9 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஓமன் (Muscat Stock Exchange (MSX)) சந்தையும் 9 புள்ளிகள் ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது.

துபாய் (Dubai Financial Market (DFM)) சந்தை 140 புள்ளிகள் வீழ்ச்சியிலும், குவைத் (Boursa Kuwait) சந்தை 113 புள்ளிகள் ஏற்றத்துடனும் முடிந்திருக்கிறது.

இந்தச் சந்தைகளின் முடிவு அனைத்துமே கலவையாக இருக்கின்றன... பெரியளவில் வீழ்ச்சியும் இல்லை.

ஏன் அந்தச் சந்தைகள் வலுவாக உள்ளன?

துபாய், அபுதாபி, குவைத் ஆகிய நாடுகளின் சந்தை, 'Shallow Market'. அதாவது இந்தச் சந்தைகளில் அவர்களுடைய சொந்த நாட்டு முதலீட்டாளர்களே குறைவாகத் தான் இருப்பார்கள். அப்போது அந்நிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைக் கேட்கவே வேண்டாம்.

ஈரான் போர்
ஈரான் போர்

மேலே சொன்ன நாடுகளில் உள்ள பெரிய முதலீட்டாளர்கள் கூட வெளிநாடுகளில் தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். மேலும், அங்கே அந்நிய முதலீட்டாளர்கள் குறைவு.

ஆக, அங்கிருக்கும் சிறிய எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் மட்டுமே அங்கே முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் சந்தை பெரியளவில் வீழ்ச்சியைக் காணவில்லை.

ஒருவேளை, அந்த நாடுகளில் முதலீடு செய்திருக்கும் பணத்தை வேறு எங்கு கொண்டு செல்வது என்று அந்தந்த நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால், அந்த சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கலாம்". என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: `என்னதிது.?' போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி? Rating: 5 Reviewed By: gg