Latest News
Friday, March 20, 2026

'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட். இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த ராஜினாமாவிற்கு இவர் சொன்ன காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கே நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்.

அப்படி அவர் சொன்ன காரணம் என்ன?

"ஈரான் நமது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தாலும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த லாபியாலும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

என்னால் மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது" என்று தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் போர்
ஈரான் போர்

அதிருப்தி..?

ஏற்கெனவே ட்ரம்ப் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஈரான் போரில் உடன்பாடில்லை என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

ஆனால், ஒரு அதிகாரி நேரடியாக இந்தக் காரணத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை. இதில் இவர் தனது பதவியை ராஜினாமா வேறு செய்துள்ளார்.

ஆக, இது ட்ரம்ப் அரசாங்கத்திற்குள்ளேயே ஈரான் போர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதா என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது.

மேலும், ட்ரம்ப் இப்போதைக்கு இந்தப் போரை முடிப்பதாகவும் இல்லை.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா? Rating: 5 Reviewed By: gg