Latest News
Saturday, April 11, 2026

இஸ்லமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்கா ரெடி; கடைசி நேரத்தில் முரண்டு பிடிக்கும் ஈரான்

பாகிஸ்தான் நேரப்படி, இன்று காலை பாகிஸ்தானின்‌ தலைநகரான இஸ்லமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

அமெரிக்கா 'ரெடி'

அமெரிக்கா சார்பாக அந்த நாட்டின் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் தலைமையில் அதிகாரிகளின் குழு இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர்.

இதற்காக நேற்றே இவர்கள் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு கிளம்பி விட்டனர்.

காலிபாஃப் பதிவு
காலிபாஃப் பதிவு

ஈரானின் கடைசி நேர நிபந்தனை

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கலந்துகொள்கிறார். இவர் பாகிஸ்தான் வந்துவிட்டார்.

ஆனால், இப்போது இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதில் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இன்னும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறி வைத்து லெபனானை தாக்கி வருகிறது.

"இரண்டு வாரப் போர் நிறுத்தம் லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தத்தையும், முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

இந்த இரண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் நடக்க வேண்டும்" என்று காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இஸ்லமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்கா ரெடி; கடைசி நேரத்தில் முரண்டு பிடிக்கும் ஈரான் Rating: 5 Reviewed By: gg