Latest News
Wednesday, April 29, 2026

'அமெரிக்க ஆயுத கையிருப்பு குறைந்துவிட்டதா?' - ஈரான் போரால் ட்ரம்ப் அரசாங்கத்திற்குள் விரிசல்

ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்கா இன்னும் முழு ஆயுதப் பலத்துடன் இருக்கிறது. ஈரான்தான் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ளது - இதுதான் அமெரிக்கா தொடர்ந்து முன்வைக்கும் ஸ்டேட்மென்ட்.

ஆனால், இந்தப் பேச்சு குறித்து தற்போது அமெரிக்க அரசாங்கத்திலேயே சந்தேகக் குரல் எழுந்துள்ளது.

'The Atlantic' இதழ் தகவலின் படி, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடந்துள்ளது.

பீட் ஹெக்ஸெத்
பீட் ஹெக்ஸெத்

அதில் ஈரான் போரில் அமெரிக்காவின் கையிருப்பில் இருந்த எத்தனை ஏவுகணைகள் குறைந்துள்ளன, ஈரான் போரில் அமெரிக்காவிற்குத் தாக்கங்கள் என்ன போன்றவற்றை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் சரியாகத் தெரிவித்துள்ளதா என்கிற சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளார் வான்ஸ்.

இந்தச் சந்தேகத்தை ட்ரம்ப் முன்னரே கூறியுள்ளார் வான்ஸ்.

ஈரான் போரில் அமெரிக்காவிற்குத்தான் வெற்றி என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்.

அவரைக் குற்றம் சாட்டுவதுபோல அல்லாமல், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் முக்கியமல்லவா என்பதுபோல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா ஏவுகணை தடுப்பான்கள், நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட பல முக்கிய ஏவுகணைகளை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தப் போரிலேயே பல ஆயுதங்களைப் பயன்படுத்தி, கையிருப்பு குறைந்தால், அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பின்னடைவாக இருக்கும் என்று வான்ஸ் தரப்பு நினைக்கிறது போலும்.

இதனால், ட்ரம்ப் அரசாங்கத்திற்குப் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'அமெரிக்க ஆயுத கையிருப்பு குறைந்துவிட்டதா?' - ஈரான் போரால் ட்ரம்ப் அரசாங்கத்திற்குள் விரிசல் Rating: 5 Reviewed By: gg