Latest News
Thursday, April 9, 2026

'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ்

நாளை (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா சார்ப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கலந்துகொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு ஜே.டி.வான்ஸ் பொருத்தமானவர் என்று அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர்.

ஜே.டி.வான்ஸ் - ட்ரம்ப்
ஜே.டி.வான்ஸ் - ட்ரம்ப்
'அது ஏன்?' என்கிற கேள்விகளுக்குப் பின்னால் உள்ள பதில்கள்...

தொடக்கத்தில் இருந்தே ஈரான் போரில் வான்ஸிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் போர் குறித்து அவர் வெளியில் எதுவும் பெரிதாக பேசவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர்.

ஆனால், இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு சுத்தமாக உடன்பாடில்லை. அதனால், இவர்களை விடுத்து, ஜே.டி.வான்ஸை அமெரிக்கா தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ட்ரம்புடன் நேரடி தொடர்பிருக்கும் ஒருவர் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது தான் இருதரப்பின் எண்ணமும். அப்படி பார்த்தாலும், அதற்கு வான்ஸ் தான் சரியான நபர்.

ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்தது என்று அனைவருக்கும் தெரியும். அதில் அமெரிக்கா தரப்பில் விஷயத்தைக் கையாண்டது வான்ஸ்.

இதுவரை போரில் அதிகம் ஆர்வமில்லாதவராக தான் வான்ஸ் இருந்திருக்கிறார். இது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, வெகுவாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'சரியான நபர் இவர் தான்' ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லும் ஜே.டி.வான்ஸ் Rating: 5 Reviewed By: gg