Latest News
Friday, April 17, 2026

"ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிட்டது; ஆனா, எங்க கப்பற்படை அங்கே தான் இருக்கும்" - ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மூடிய ஹார்முஸ் ஜலசந்தியை இன்று தான் முழுமையாக திறப்பதாக அறிவித்திருக்கிறது ஈரான்.

இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்...

"ஹார்முஸ் ஜலசந்தி இப்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இப்போது அது வர்த்தகத்திற்கும், முழு பயணத்திற்கும் தயாராக உள்ளது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஆனால், அங்கே உள்ள அமெரிக்காவின் கப்பற்படை முற்றுகை முழுமையாக தொடரும். இது ஈரானுக்கு மட்டுமானது.

ஈரானுடனான பேச்சுவார்த்தை 100 சதவிகிதம் முடியும் வரை இந்த முற்றுகை இருக்கும்.

ஏற்கெனவே பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கான நடைமுறை மிக வேகமாக முடிய வேண்டும்".

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: "ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிட்டது; ஆனா, எங்க கப்பற்படை அங்கே தான் இருக்கும்" - ட்ரம்ப் Rating: 5 Reviewed By: gg