Latest News
Wednesday, April 15, 2026

Malacca Strait பக்கம் திரும்பும் அமெரிக்கா: சீனாவிற்கு 'பெரிய செக்?' இந்தியாவும் கைக்கோக்குமா?

'என்ன பார்வை நம்ம பக்கம் திரும்புது?' என்பதுபோல, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து மெல்ல மெல்ல அமெரிக்காவின் கண்கள் மலாக்கா ஜலசந்தி பக்கம் திரும்புகிறது போலும்.

தென் கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கிறது மலாக்கா ஜலசந்தி. இதன் பக்கத்து நாடுகள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர்.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும் இந்த ஜலசந்தியின் பக்கத்து நாடுகள் மட்டுமல்ல. அந்த மூன்றும் இணைந்து தான் மலாக்கா ஜலசந்தியின் பாதுகாப்பு முதல் போக்குவரத்து வரை அனைத்தையும் நெறிமுறைப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, இந்தோனேசியா
அமெரிக்கா, இந்தோனேசியா

இப்போது என்ன பிரச்னை?

நேற்று முன்தினம் (ஏப்ரல் 13), அமெரிக்கா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தோனேசியாவின் வான்வெளியில் அமெரிக்காவின் விமானப்படை இயங்கலாம்.

மேலோட்டமாக பார்த்தால், இது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தமாகத் தெரியலாம். ஆனால், இந்த ஒப்பந்தம் மலாக்கா ஜலசந்தியை அமெரிக்கா கண்காணிப்பதற்கும், அங்கே இயங்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கலாம்.

மலாக்காவிற்கு மிக அருகில் தான் இருக்கிறது இந்தோனேசியா. அதனால், அங்கிருந்து மலாக்கா ஜலசந்தியை அமெரிக்கா கண்காணிப்பது மிக எளிதாக இருக்கும்.

இது தேவையான நேரத்தில், மலாக்கா ஜலசந்தியில் அமெரிக்கா களமிறங்க கூட உதவலாம்.

இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் பெரிய பிரச்னை சென்றுகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், இந்தோனேசியா உடன் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது அமெரிக்கா.

ஒருவேளை, முக்கிய கடல் பாதைகளை தன் பக்கம் வைத்துக்கொள்ள அமெரிக்கா பார்க்கிறதா என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள்.

சீனாவிற்கு செக்?

மலாக்கா ஜலசந்தி வழியாக தான் எரிசக்தி, எலெக்ட்ரானிக்ஸ், தொழிற்சாலை உதிரி பாகங்கள் போன்றவை முக்கியமாக வணிகம் செய்யப்படுகின்றன.

சீனா
சீனா

சீனா, ஜப்பான், தென் கொரியா, வட கொரியா நாடுகளுக்கு மலாக்கா ஜலசந்தி மிக முக்கிய கடற்பாதை.

இந்த பாதை மட்டும் மூடப்பட்டாலோ, பாதிக்கப்பட்டாலோ, சீனாவின் பொருளாதாரம் நிச்சயம் தள்ளாட்டம் காணும். அந்தளவிற்கு இந்தப் பாதையை சீனா நம்பியுள்ளது... இந்தப் பாதை வழியாக தான் எரிசக்தி இறக்குமதிகளை சீனா செய்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பாதையால் அமெரிக்காவிற்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லை. இந்தப் பாதையை அமெரிக்கா பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.

ஆனால், இங்கே ஆதிக்கம் செலுத்தினால், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிடி அமெரிக்காவிற்கு கிடைக்கும்.

இந்தியாவிற்கு 'ப்ளஸ்'?

இந்த விஷயத்தில் அமெரிக்கா உடன், இந்தியாவிற்கும் ப்ளஸ்கள் உள்ளன.

இந்தியாவின் அந்தமான் நிகோபார் மலாக்கா ஜலசந்தி அருகே தான் உள்ளது.

காம்ப்பெல் பே உள்ளிட்ட இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் அந்த ஜலசந்தி அருகே தான் உள்ளது.

இதனால், சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க இந்தியாவும், அமெரிக்காவும் கைக்கோக்கலாம்.

ஆனால், இப்போதைக்கு அமெரிக்கா, இந்தோனேசியா பாதுகாப்பு ஒப்பந்தம் மலாக்கா ஜலசந்தியை மையமாக வைத்து தான் போடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அனைத்தும் பார்வைகளாக மட்டுமே விரிகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Malacca Strait பக்கம் திரும்பும் அமெரிக்கா: சீனாவிற்கு 'பெரிய செக்?' இந்தியாவும் கைக்கோக்குமா? Rating: 5 Reviewed By: gg