இன்று தென் கொரிய சந்தை 7,000 புள்ளிகளைத் தாண்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. தென் கொரிய நேரப்படி, இன்றைய சந்தையில், தென் கொரிய சந்தையான காஸ்பி 381.8 புள்ளிகள் ஏறி, 7,318 வரை சென்றிருந்தது.
இதுவரை இந்த ஆண்டில் காஸ்பி 70 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஈரான் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது... உலக சந்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், காஸ்பி மட்டும் எப்படி உச்சத்தைத் தொட்டுள்ளது என்கிற கேள்வியைப் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் முன்வைத்தோம்.

"இன்று மட்டும் காஸ்பி சந்தை உச்சத்தைத் தொடவில்லை. கடந்த சில தினங்களாகவே, தென் கொரியா சந்தை அடிக்கடி புதுப்புது உச்சங்களைத் தொட்டு வந்தது.
ஈரான் - அமெரிக்கா இடையே சுமூக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக அளவில் ஒரு பாசிட்டிவ் ஃபீலைக் கொடுத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளில் ஏ.ஐ மற்றும் சிப் தயாரிப்பு சார்ந்த தொழிற்சாலை அதிகம் இருக்கின்றன.
இப்போது இந்த உலகம் ஏ.ஐ நோக்கி நகர்ந்து வருகிறது. இது தென் கொரியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ்.
அடுத்ததாக, சாம்சங், எல்.ஜி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் தாயகம் தென் கொரியா தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே, FIIஸ் வெளியேறுகிறார்கள் என்கிற தகவலை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
அவர்கள் அமெரிக்காவிற்கோ, சீனாவிற்கோ செல்லாமல், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தங்களது முதலீடுகளைக் கொண்டு செல்கிறார்களோ என்கிற பேச்சும் சந்தையில் உள்ளது". என்கிறார்.

0 comments:
Post a Comment