ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை.
அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது.
ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எதுவும் வெளியே செல்லாமல் இருக்க அங்கே அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது ஈரானை எப்படி பாதித்துள்ளது என்பதை அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"சாக்கடை குழாய்க்குள் இருக்கும் எலிகளுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரிவது ரொம்ப கஷ்டம். இருட்டில் அமர்ந்திருக்கும் ஈரான் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்த சில விஷயங்கள்:
1. ஹார்முஸ் ஜலசந்தி இப்போது முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2. உங்களிடம் அமெரிக்க டாலர் போன்ற அந்நியச் செலாவணிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
3. உணவு மற்றும் பெட்ரோல் பங்கீடு அமலுக்கு வந்துவிட்டது.
4. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது.
5. பிப்ரவரி 27-க்கு முன்பு இருந்தது போன்ற 'சுதந்திரமான கப்பல் போக்குவரத்து' மீண்டும் அமலாகும் வரை, இந்த முற்றுகை தொடரும்".
It is very difficult for rats in a sewer pipe to know what’s going on in the outside world. Some color for the Iranian Leadership as they literally sit in the dark:
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) May 1, 2026
1. The United States has complete control of the Strait of Hormuz.
2. There is a hard currency, i.e. U.S. dollar,… https://t.co/oNHVEvdNE4

0 comments:
Post a Comment