Latest News
Wednesday, June 24, 2026

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும்.

இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தையில் நடந்துள்ளது. முடக்கப்பட்ட முழு சொத்தும் விடுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட தொகை மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலர்கள்
அமெரிக்க டாலர்கள்

ஈரானுக்கு செல்லும் அமெரிக்காவின் நிதி

இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், "முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது தொடர்பாக, பிரிவு 11-ன் கீழ் தலா 6 பில்லியன் டாலர் மதிப்பிலான இரண்டு தனித்தனி தொகைகள் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் கத்தார் பயணத்தின்போதே எடுக்கப்பட்டு விட்டன.

ஆனால், இறுதிக் கையெழுத்து சுவிட்சர்லாந்து பயணத்தின் போதுதான் போடப்பட வேண்டியிருந்தது. அது இப்போது வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் பதிவு

ஆனால், இந்தச் சொத்தை ஈரான் எப்படி பயன்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பே தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

"அமெரிக்க கருவூலம் விடுவிக்கும் பணம் அல்லது பொருளாதாரத் தடை நீக்க நிதி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு எஸ்க்ரோவில் (பாதுகாப்புக் கணக்கில்) வைக்கப்படும்.

இந்த நிதி முழுக்க முழுக்க அமெரிக்காவிடமிருந்து மட்டுமே உணவு மற்றும் மருத்துவப் பொருள்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

குறிப்பாக, நமது சிறந்த அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோளம், கோதுமை மற்றும் சோயாபீன்ஸ் போன்றவற்றை வாங்குவதற்கு இது பயன்படும்.

இந்தப் பொருள்கள் ஈரானுக்கு இப்போது மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன. இது ஒரு மனிதாபிமானப் பிரச்னை. எனவே நிலைமை கையை மீறிப் போவதற்குள் 'இப்போதே' அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

பேச்சுவார்த்தைகள் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கின்றன!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் பதில்

ஆனால், ட்ரம்பின் இந்தப் பேச்சிற்கு ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், "இந்த நிதி அமெரிக்காவிடமிருந்து மட்டுமே பொருள்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படாது.

எங்களுக்கு சரி என்று தோன்றும் எந்தவொரு வழியிலும், முற்றிலும் சுதந்திரமாகப் பயன்படுத்தப்படும்" என்று மறுப்பு தெரிவித்துப் பேசியிருக்கிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு! Rating: 5 Reviewed By: gg