Latest News
Monday, July 6, 2026

கொலம்பஸுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு முன்னும்.! 250 வயது சுதந்திர அமெரிக்காவின் வரலாறு என்ன?

1492-ம் ஆண்டு ஆசியாவிற்கான மேற்கு வர்த்தகப் பாதையைத் தேடி ஸ்பெயினில் இருந்து புறப்பட்டார் கடற்பயணியும், ஆய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் அடைந்ததோ அமெரிக்காவை.

கொலம்பஸ் என்ன நினைத்து கிளம்பினாரோ அது அந்தப் பயணத்தில் தோல்வி தான். ஆனால், அந்தப் பயணம் உலக வரலாற்றில் மிகப்பெரிய சக்சஸ். கொலம்பஸின் அந்தப் பயணம் தான் ஐரோப்ப நாடுகளுக்கு 'புதிய உலக'த்தை அடையாளம் காட்டியது.

ஆம்... கொலம்பஸ் அப்போது அமெரிக்காவை கண்டுபிடித்த போது, அது புதிய உலகம் என்று தான் அழைக்கப்பட்டது.

கொலம்பஸ்
கொலம்பஸ்

அதுவரை ஐரோப்பிய நாடுகள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை மட்டுமே அறிந்திருந்த உலக நாடுகளுக்கு, அப்போது தான் அமெரிக்கா கண்ணில் பட்டது.

அதனால், அவர்கள் அமெரிக்காவை புதிய உலகமாகவே கருதினார்கள்.

கொலம்பஸ் அமெரிக்காவில் சென்றிறங்கிய சில நாள்களிலேயே ஸ்பெயின் அந்த நாட்டை கைப்பற்றியது. அடுத்து அங்கே ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து என காலனிய ஆட்சி தான்.

ஆனால், அமெரிக்காவின் வரலாறு அப்போது தொடங்கவில்லை. அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிறந்த சமூக அமைப்புகள், அரசாங்க முறைகளோடு அமெரிக்கா நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தது.

கொலம்பஸ் தான் அமெரிக்காவிற்கு வந்திறங்கிய முதல் நபரா என்று கேட்டால், 'இல்லை'. அவருக்கு முன்பே, 10-ம் நூற்றாண்டில் லீஃப் எரிக்சன் எனும் நார்வே நாட்டு மாலுமி வட அமெரிக்காவில் கால்பதித்துவிட்டார்.

கால் பதித்தது மட்டுமில்லாமல், அந்த நாட்டில் 'லான்ஸ் ஓ மெடோஸ்' எனும் குடியேற்ற முயற்சியையும் செய்திருக்கிறார். ஆனால், அது வெற்றி பெறவில்லை.

அவருக்கு அடுத்து 500 ஆண்டுகளுக்கு பிறகே, அமெரிக்காவில் குடியேற்றம் வெற்றிகரமாக நடந்திருக்கிறது.

அமெரிக்கா
அமெரிக்கா

ஒரு கண்டத்தை ஒரு நாடு ஆண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து என பல ஐரோப்பிய நாடுகள் ஆண்டதால், தொடர்ச்சியாக அவர்களுக்குள் மோதல்.

அந்த மோதல்களுக்கு ஆன செலவுகளும்... வாங்கப்பட்ட கடன்களும் அமெரிக்க மக்களின் தலையில் தான் வரிகளாக விடிந்தன. இதை பொறுத்துகொள்ள முடியாத அமெரிக்க மக்கள், 'எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை' என்கிற முழுக்கத்தை முன்னெடுத்தனர்.

சர்க்கரை சட்டம் (இறக்குமதி ஆகும் சர்க்கரைக்கு கடுமையான வரி), முத்திரைச் சட்டம், பாஸ்டன் படுகொலை (பிரிட்டிஷ் வீரர்களை எதிர்த்து போராடியதால் துப்பாக்கிச் சூடு) என அடுத்தடுத்த பிரிட்டிஷின் அதிரடிகளுக்கு மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அவர்களைச் சமாளிக்க 1774-ல் Intolerable Acts கொண்டு வந்தது பிரிட்டன். ஆனால், இது அமெரிக்க மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி விடவில்லை.

1776-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மக்களின் வலுவான குரலுக்கும், தொடர் போராட்டங்களுக்கும் பதிலாக, 'அமெரிக்காவிற்கு சுதந்திரம்' கிடைத்தது.

ஐரோப்ப நாடுகளின் காலனிகளாக இருந்த 13 மாகாணங்கள் ஒன்றாக கூடி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவானது.

அதன் பின், 1788-ம் ஆண்டு அமெரிக்க அரசியலைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றார்.

1803-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்த 'லூசியானா' பகுதியை வாங்கியது அமெரிக்கா. இதனால், அமெரிக்காவின் பரப்பளவு இரட்டிப்பானது.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

சுதந்திரத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் அனைத்தும் சமூகமாக மாறிவிட்டது என்றால், இல்லை.

உள்நாட்டு போர், பலவீனமான மத்திய அரசு, இனவெறி பாகுபாடு, வருமானப் போராட்டம், வெளிநாட்டு வர்த்தகப் பிரச்னைகள், அடிமை முறை, பொது சுகாதார பிரச்னை, உலகப் போர், பொருளாதாரப் பெருமந்த நிலை, சோவியத் யூனியன் உடனான போர் போன்ற பிரச்னைகளை சந்தித்தது.

ஆனால், ஒவ்வொன்றையும் அமெரிக்கா கவனமாக கையாண்டு சரி செய்தது. அமெரிக்காவின் ஒவ்வொரு அடியையும் வளர்ச்சியை நோக்கியே வைத்தது.

அதற்கான வெற்றியாகத் தான், 250-வது சுதந்திர தினத்தைத் தற்போது கொண்டாடி முடித்துள்ளது இன்றைய வளர்ச்சியடைந்த, வல்லரசான 'United States of America'.

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கொலம்பஸுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு முன்னும்.! 250 வயது சுதந்திர அமெரிக்காவின் வரலாறு என்ன? Rating: 5 Reviewed By: gg