Latest News
Saturday, July 11, 2026

'It's over' - ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் - மீண்டும் போர் தொடக்கமா?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ, அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இழப்பிற்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கியதுடன், மிக முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.

அமெரிக்கா - ஈரான் போர்
அமெரிக்கா - ஈரான் போர்

போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் மாத மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாதம் கூட நீடிக்காமல் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் ஹார்முஸ் நீரிணையில் சென்ற கப்பலை தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது.

இந்த மோதலின் உச்சக்கட்டமாகவே, தற்போது ட்ரம்ப் 'ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது' என அறிவித்திருக்கிறார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், " என்னைப்பொறுத்தவரை ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது (It's over).

இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் நேர விரயம். நான் இனி அவர்களுடன் எந்தவித உடன்பாடும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மீண்டும் போர் தொடரும் என அச்சம் எழுந்திருக்கிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 'It's over' - ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் - மீண்டும் போர் தொடக்கமா? Rating: 5 Reviewed By: gg