Latest News
Friday, August 14, 2026

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய கப்பலாக பார்க்கப்படும் `ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

அந்த கப்பல் ஈரான் போர் தொடங்கிய பிறகு அப்போரில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 250 நாட்களுக்கும் மேலாக கரைக்கு திரும்பாமல் தொடர்ந்து ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஈரானின் தாக்குதலையும் இக்கப்பல் சந்தித்துள்ளது. இதனால் கப்பல் இருக்கும் கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்பு மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு அத்தியாவசிய பொருட்களான உணவு போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலில் இருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களில் சிலர் கடலில் குதித்து தற்கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விரர்களின் உறவினர்கள் அமெரிக்க கடற்படையை கடுமையாக சாடி இருந்தனர். அமெரிக்க எதிர்க்கட்சிகளும் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தன.

இதனால் அக்கப்பலுக்கு மாற்றாக எஸ்.எஸ்.ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. அந்த கப்பல் வந்து ஏற்கனவே இருக்கும் எஸ்.எஸ்.ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுக்கு ஓய்வு கொடுத்து அதனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும். ஜார்ஜ் வாஷிங்டன் தற்போது ஜப்பான் கடற்பகுதியில் முகாமிட்டு இருந்தது. அக்கப்பல் அங்கிருந்து ஏற்கனவே இருந்து புறப்பட்டுவிட்டது. பசிபிக் பகுதியில் செயல்பட்டு வந்த அக்கப்பல் இந்த வாரம் தான், பலத்த பாதுகாப்புடன் ஏவுகணை தடுப்பு சாதனங்களுடன் மலாக்கா ஜலசந்தி வழியாக மத்திய கிழக்கு பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி சுழற்சி முறையில்தான் ஜார்ஜ் வாஷிங்டன் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

இச்செய்தி ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் இருக்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் சொந்தங்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்! Rating: 5 Reviewed By: gg