Latest News
Tuesday, August 11, 2026

"ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" - ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அனுமதிக்க ஈரான், 'அந்த இரு நாடுகளும் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என்கிற நிபந்தனையை பிளான் செய்து வருகிறது.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்...

"கடந்த ஐந்து மாத கால ராணுவ மோதலின்போது தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பிரதிநிதிகள் இழப்பீடு கோரி வருவதைப் பார்க்கிறேன் (அவர்களிடம் அணுஆயுதம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் போரே தொடங்கியது!).

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஆனால், நமது பேச்சுவார்த்தைகளிலோ அல்லது கூட்டங்களிலோ இதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை!

இருப்பினும், இது ஒரு சுவாரசியமான யோசனைதான். ஏனெனில், இப்போது நானும் ஈரானிடம் இருந்து இழப்பீடு கோருகிறேன்.

தளபதி சுலைமானியின் வழிகாட்டுதலில் தொடங்கி, யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) போர்க்கப்பல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் உட்பட, ஈரானின் வீதியோரக் குண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்காகவும் வீரர்களுக்காகவும் இந்த இழப்பீட்டைக் கேட்கிறேன்.

அதுமட்டுமன்றி, கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரைத் தவிர்த்து, கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்று குவித்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இனிவரும் எந்தவொரு மற்றும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கையை மிக ஆணித்தரமாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்."

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: "ஈரானின் இழப்பீடு யோசனை நல்லா இருக்கு; அதே இழப்பீட்டை அமெரிக்காவிற்கு ஈரான் தரணும்" - ட்ரம்ப் Rating: 5 Reviewed By: gg