Latest News
Tuesday, September 15, 2026

ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு

இன்றுடன் ஈரான் போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் 18 நாட்கள் ஆகியிருக்கின்றன.

இடையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடந்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால், இரண்டு நாடுகளுமே இப்போதும் ‘தாக்குதல்’ மோடில்தான் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பேச்சுவார்த்தையைக் கேட்கும் ஈரான்

ஈரான் போர் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில்,

“தோற்றுக்கொண்டிருக்கும் ஈரான் நாடு, எப்படியாவது மிக விரைவாக ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளத் துடிக்கிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

அமெரிக்கா இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரா, இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்.

இருப்பினும், இந்த யோசனைக்கு நாங்கள் கொள்கை ரீதியாகத் தயாராகவே இருக்கிறோம்” என்று பேச்சுவார்த்தைக்கு வெள்ளைக் கொடி காட்டியுள்ளார் ட்ரம்ப்.

ஆனால், ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஈரான் பேச்சுவார்த்தைக்குத் துடிக்கிறது என்று 40-க்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் கூறிவிட்டார்.

அப்போதெல்லாம் ஈரான் இந்தக் கூற்றை மறுத்திருக்கிறது.

இப்போது ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதனால், ட்ரம்ப் இப்போது பதிவிட்டிருப்பது உண்மையா... இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஈரான் போரில் உலக நாடுகளுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை – ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்.

தற்போது நீர்ச்சந்தி மூடல் குறித்தும், உலக நாடுகள் குறித்தும் ட்ரம்ப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

நமக்கு எந்தவித உதவியும் செய்யாத உலக நாடுகள், இந்தப் போர் முடிந்தவுடன் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும், வழங்குவார்கள்!

நமக்காக நாம் செய்வதை விட மற்ற நாடுகளுக்காகவே நாம் அதிகமாகச் செய்து வருகிறோம். பல தலைமுறைகளாகவே இதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்!”

ஆக, ஈரான் போர், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் வைத்து ட்ரம்ப் புதிய கணக்கு ஒன்று போடுகிறார்.

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரான் போர்: "உலக நாடுகள் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - ட்ரம்ப் புதிய கணக்கு Rating: 5 Reviewed By: gg