Latest News
Saturday, September 12, 2026

BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா!

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் (Xu Feihong) தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் 18-வது BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். இதனையொட்டி, பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5:45 மணிக்கு இருநாட்டின் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங்
சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங்

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். கசான் மற்றும் தியான்ஜின் நகரங்களில் நடைபெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் தொடர்ச்சியாகச் சந்திப்பது இது 3-வது முறையாகும்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங், ``தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இருதரப்பு உறவை நீண்டகால நோக்கில் வலுப்படுத்தவும், தொடர்புகளை அதிகரிக்கவும், கருத்து வேறுபாடுகளைச் சரியாகக் கையாண்டு நல்லண்டை நாடுகளாகச் செயல்படவும் சீனா விரும்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: BRICS 2026: ``கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்" - வெளிப்படையாக சொல்லும் சீனா! Rating: 5 Reviewed By: gg