Latest News
Monday, October 12, 2026

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

என்னதான்... தற்காலிகப் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என இருந்தாலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

மசூத் பெசெஷ்கியான் பதிவு
மசூத் பெசெஷ்கியான் பதிவு

இந்த நேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில்...“நாமே நம்மை ஒடுக்கிக்கொள்ளாமலும், நாமே நம்மை அழித்துக்கொள்ளாமல் இருக்கும் வரை, எதிரியால் நம்மை அழிக்கவோ அல்லது பணியவைக்கவோ முடியாது.

ஈரானிய இளைஞர்கள் அனைவரின் திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்படுவதற்கும் மிளிர்வதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: "நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு Rating: 5 Reviewed By: gg