Latest News
Tuesday, October 20, 2026

இந்தியாவில் மார்கோ ரூபியோ! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில்?! ரூபியோ சொல்லும் தகவல் என்ன?

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது.

இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு அமெரிக்கா 60 நாள்கள் அவகாசம் அளித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

100% கூடுதல் வரி அச்சுறுத்தல்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராகக் கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும் 'லிண்ட்சி கிரகாம் சட்டம் 2026' (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026)-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் 18-ம் தேதி கையெழுத்திட்டார்.

இந்தச் சட்டத்தின்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகளின் பொருள்கள் மீது 100% வரை கூடுதல் வரி விதிக்க முடியும்.

இந்தியாவும் ரஷ்ய எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஏற்றுமதியாளர்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

நிர்வாக உத்தரவும் விலக்கும்

இந்தச் சூழலில், அக்டோபர் 16-ம் தேதி, பிறப்பித்த நிர்வாக உத்தரவின் மூலம், இச்சட்டத்தின்கீழ் விதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட வரிகள் மற்றும் தடைகளுக்கு அதிபர் ட்ரம்ப் தற்காலிக விலக்கு அளித்தார்.

இதன் பொருளாதாரத் தாக்கத்தை முழுமையாக மதிப்பிட அடுத்த 60 நாள்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா
இந்தியா - அமெரிக்கா

வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

இந்த விலக்கு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடர்பான அழுத்தத்தைச் சற்றே குறைத்துள்ள அதேவேளையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கும் வழிவகுத்துள்ளது.

ஆசிய மண்டலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியா மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவையும் இந்த முடிவில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெளியுறவுச் செயலர் ரூபியோ, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இதனால் வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமான அடுத்தகட்டம்

அமெரிக்கா அளித்துள்ள இந்த 60 நாள் கால அவகாசம் என்பது நிரந்தரத் தீர்வு அல்ல.

இந்த அவகாசம் முடியும் நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் இறுதி முடிவும், தற்போது நடைபெறும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றமுமே இந்தியாவின் எதிர்கால சர்வதேச வர்த்தக உறவைத் தீர்மானிக்கும்.

Next
This is the most recent post.
Older Post
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இந்தியாவில் மார்கோ ரூபியோ! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில்?! ரூபியோ சொல்லும் தகவல் என்ன? Rating: 5 Reviewed By: gg