Latest News
Thursday, May 2, 2013

ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்...!

அகடம் என்ற தமிழ் படத்தை, ஒரே ஷாட்டில், 2 மணி நேரம் தொடர்ச்சியாக படமாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் தமிழர்கள். லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில், புதுமுகம் இஷாக் இயக்கியுள்ள படம் "அகடம்". முற்றிலும் புதுமுகம் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். பாஸ்கர் இசையமைத்துள்ளார். கின்னஸ் சாதனைக்காக கடந்த டிசம்பர் 7ம் தேதி ஒரே ஷாட் மூலம் படம் மொத்தத்தையும் எடுக்க திட்டமிட்டனர் படக்குழுவினர். அதன்படி படம் மொத்தமும் படமாக்கப்பட்டது. ஒரே ஷாட்டில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 விநாடிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகும் எடிட்டிங் செய்யப்படவில்லை. நோட்டரி பப்ளிக் வக்கீல், ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் எத்தன் பட இயக்குனர் சுரேஷ் ஆகியோர் சாட்சிகளாகக் கலந்து கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த சாதனையை கின்னஸ் குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த கின்னஸ் குழுவினர், படத்திற்கு கின்னஸ் சாதனை பட்டமும், அதற்கான சான்றும் கொடுத்தனர். இதற்கு முன்பு ரஷ்ய மொழிப்படமான ‘ரஷ்ஷியன் ஆர்க்கின்  என்ற படம் 1 மணி நேரம் 30 நிமிடத்தில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தமிழ் படமான அகடம் படம் முறியடித்துள்ளது. 
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(மே-1ம் தேதி) நடந்தது. இயக்குனர் பாக்யராஜ் படத்தின் டிரைலரை வெளியிட்டார். அப்போது, கின்னஸ் சாதனை சான்றிதழையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தற்போது தமிழ்படம் ஒன்று உலக சாதனை படைத்து இருப்பது இந்திய சினிமாவை மேலும் பெருமை சேர்த்து இருக்கிறது. இது தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும்.


Newer Post
Previous
This is the last post.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்...! Rating: 5 Reviewed By: gg