ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதை கொண்டாடும் வகையில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் உட்பட தலைவாவில் பணியாற்றிய அனைவரும் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். துப்பாக்கி படத்தில் கூகிள் கூகிள் பாடலைப் பாடிய விஜய், இந்தப் படத்தில் 'வாங்க அண்ணா' என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார். எனவே தலைவா பாடலைக் கேட்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் பாடியதாகக் கூறப்பட்ட பாடல் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
தலைவா பாடல் வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் விஜய் பிறந்தநாளைக்கு 1 நாளைக்கு முன்னர் தலைவா ரிலீசாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தலைவர் பாட்டு சூப்பர்
ReplyDelete