தயாரிப்பு – மீகா என்டர்டெயின்மென்ட் – தயாநிதி அழகிரி
இயக்கம் – மணிமாறன்
இசை – ஜி.வி. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – வேல் ராஜ்
படத்தொகுப்பு – கிஷோர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வெற்றி மாறன்
மக்கள் தொடர்பு – நிகில்
நடிப்பு – சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி, கே கே மேனன் மற்றும் பலர்.
வெளியான தேதி – 19 ஏப்ரல் 2013.
—
ஒரு வரியில் சொல்லி விடக் கூடிய கதை, அதை ஒரு ‘தேசிய நெடுஞ்சாலை’ அளவிற்கு பல கிலோ மீட்டர் இழுத்து படமாக காட்டியிருக்கிறார்கள்.
தன்னுடன் படிக்கும் பணக்கார காதலியான அஷ்ரிதாவை, சித்தார்த் கடத்திச் சென்று திருமணம் (?) செய்து கொள்ள எப்படி போராடுகிறார் என்பதுதான் கதை. இவர்கள் பயணத்தை, வேகத் தடையாக இருந்து தடுக்கும் ஒரு காவல் துறை அதிகாரி. காதலர்களை, காவல் துறை தடுத்ததா இல்லையா, காதலர்கள் தப்பித்தார்களா இல்லையா ? , இப்படி நாமும் கொஞ்சம் வரிகளைச் சேர்த்துத்தான் கதையை வளர்க்க வேண்டியிருக்கிறது.
இயக்குனர் மணிமாறனுக்கு முதல் படம், குரு வெற்றிமாறனுடன் இந்த ‘சினிமா நெடுஞ்சாலை’யில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இடைவேளை வரை வழ வழ சாலையில் வேகமாக பயணித்தவர், அதன் பின் பல வேகத் தடைகளை படத்தில் வைத்து விட்டார். (இன்னும் நல்லா ரூம் போட்டு யோசிச்சிருக்கலாம்). சீக்கிரமா இடைவேளைக்குப் பிறகு சில காட்சிகளை ‘ட்ரிம்’ பண்ணா நல்லா இருக்கும்.
சித்தார்த், ஒரு 30 வயசு இருக்குமா உங்களுக்கு ? இருந்தாலும் காலேஜ் பையன் மாதிரிதான் இருக்கீங்க..காம்ப்ளிமென்ட்தான் இது…ஆனால் கொஞ்சம் கலகலப்பா ஜாலியா இருந்திருக்கலாம். ஏன், முகத்துல அவ்வளவு சோகத்தை தேக்கி வச்சிருக்கீங்க…அழகான காதலிய வேற யாராவது தள்ளிட்டு போயிடுவாங்கன்னா…பரவால்லை..இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவின் இளம் நாயகனா உங்க வண்டிய ஹை ஸ்பீட்ல ஓட்டலாம்..அதுக்கு கொஞ்சம் ‘தீயா வேலை செய்யணும் சித்தார்த்து’….
யார் அந்த அழகான அஷ்ரிதா ஷெட்டி…எங்க ஸார் தேடி கண்டுபிடிச்சீங்க…பார்த்த உடனேயே கவிதைலாம் வருது…கொஞ்சமா சிரிச்சி, நிறைய கவர்ந்துடறாங்க…நடிப்பைப் பத்திலாம் கேக்கக் கூடாது…அப்பா கிட்ட தைரியமா பேசறத தவிர, காதலிக்கிறதுதான் இவங்க முழுநேர வேலை, இல்லை ‘பப்’புக்கு போறாங்க…அது என்ன பார்க்குலாம் போய் காதலிக்காம ‘பப்’புக்கு போய் காதலிக்கிறாங்க…இதனால இரண்டு , மூணு பாடல்ல ‘மது அருந்துவது உடல் நலத்துக்குக் கேடு’ன்னு கார்டு போட வேண்டியதா போச்சே….
காதலுக்கு எதிரா இருக்கிறவங்கள வில்லன்னு சொல்லணும்னா, காவல் துறை அதிகாரி கே கே மேனன், அஷ்ரிதா அப்பா அவினாஷ் இவங்க இரண்டு பேரை சொல்லணும்..
அவினாஷ் அப்பப்படி கோபப்பட்டு பேசற அரசியல்வாதியா கடமையை செவ்வனே செஞ்சிருக்காரு.
கே கே மேனன், முகத்துல கோபத்தை கூட மறைச்சி வச்சி நடிச்ச மாதிரியே இருக்கு…படம் முழுக்க உடைந்த கையோட ஜீப் ஓட்டிட்டே இருக்காரு.
ஹீரோ காதலிக்கிறார்னா அந்த காதலுக்கு உதவுற நண்பர்கள்ணு நாம பார்க்கிற 999வது தமிழ் சினிமான்னு இந்த படமும் நிரூபிக்குது. நல்ல வேளை நண்பர்கள் யாரையும் சாகடிக்கலை.
ஜிவி பிரகாஷ் இசையில் ‘ஓரக்கண்ணால… , ‘யாரோ இவன்…’ ரசிக்க வச்சிருக்கு. ஹிட்டான பாட்டால் வரும்னு தெரிஞ்சே வருங்கால மனைவிய பாட வக்கிறாரு ஜிவி.
உதயம் – NH 4 – நல்ல வேகம் …பட்..ஸ்பீட் பிரேக்கர்ஸ் கொஞ்சம் இருக்கு…


0 comments:
Post a Comment