7 படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, சிம்புடன் வேட்டை மன்னன், வாலு என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிம்பு படங்களுக்கு கொடுத்த பின்னர் மிச்சம் இருக்கும் கால்ஷீட்டை மட்டும் பிறருக்கு கொடுப்பதால், ஹன்சிகா சிம்புவின் ஆள் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தி ஹன்சிகாவின் காதுக்கு எட்டியபோது அப்படியே அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், "சிம்புவுடன் இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்பதற்காக இப்படி எல்லாம் கூறக் கூடாது. நானும் சிம்புவும் நல்ல நண்பர்கள். எல்லா நடிகர்களையும் போல தான் அவருடன் பழகி வருகிறேன். சிம்புவைக் காதலிப்பதாக வரும் செய்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஹன்சிகா.
இதற்கிடையில் சிம்புவுக்கு தீவிரமாக பெண் தேடி வருவதாக ஒரு சிலரும், வேலூரை சேர்ந்த ஒருவரை சிம்பு திருமணம் செய்யப் போகிறார் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படி இருப்பினும் சிம்புவுக்கு பெண் தேடி வரும் செய்தி மட்டும் உண்மை.


0 comments:
Post a Comment