ரமணா இந்தி ரீமேக்கில் தமன்னா, காஜல் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வாய்ப்பு பெற இலியானாவும் முயற்சி செய்து வருகிறாராம்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படம் இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தை தெலுங்கு படமான வேதத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். படத்தில் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தெரிந்தும் படத்தில் ஒரு வாய்ப்பை பெற்றுவிட இலியானா முட்டிமோதிக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா பர்ஃபி இந்தி படத்தோடு தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் செட்டிலாகி விட்டார்.
தமன்னாவும், காஜலும் இந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment