Latest News
Saturday, June 1, 2013

சென்னையில் படமாக்கப்படும் ஜில்லா

கோலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து முடிந்தது.

14 நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.

இதில் விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க இருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காக சென்னை ஸ்டுடியோவில் மதுரையைப் போன்று பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்துள்ளனர்.

அநேகமாக ஜூன் முதல் வாரத்தில் ஜில்லாவின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையில் படமாக்கப்படும் ஜில்லா Rating: 5 Reviewed By: gg