சென்னை: விஜய்யின் தலைவா படம் நாளையும் ரிலீஸ் ஆகாது போன்று. விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் அன்று அதாவது கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்ன காரணம் என்று தெரியாமல் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும், அவரது அப்பா சந்திரசேகரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றனர். ஆனால் அவரை சந்திக்க முடியாமல் திரும்பினர். இந்நிலையில் படத்தின் திருட்டு சிடிக்கள் வெளியாகியுள்ளன. படம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா சுதந்திர தினம் அன்று ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் நாளை ரிலீஸ் ஆகாது போன்று. இதற்கிடையே ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிவிட்டார். தனது படம் ரிலீஸாக ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் விஜய் உள்ளார்.
Wednesday, August 14, 2013
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment