Latest News
Wednesday, August 14, 2013

அஜித்தின் 'வி' செண்டிமெண்ட் கைகொடுக்குமா?

தமிழ் நடிகர்களில் சற்று வித்தியாசமானவர் அஜித். மனதில் பட்டதை துணிந்து பேசுவதுடன், தேவைப்படுபவர்களுக்கு சற்றும் யோசிக்காமல் உதவும் குணம் கொண்டவர். அஜித்தின் இந்த குணங்களுக்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படத்துக்கு 'வீரம்' என்று சில நாட்களுக்கு முன்னர் தான் பெயர் வைக்கப்பட்டது. பொதுவாக எந்த ஒரு விஷயத்துக்கும் செண்டிமெண்ட் பார்க்காதவர் அஜித். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் பலரும் படத்தில் பெயர் 'வ' வரிசையில் தொடங்கி இருப்பதால், நிச்சயம் வெற்றி பெரும் என்று ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கூட ஏற்புடையதாகவே தோன்றுகிறது.
அதாவது அஜித் நடித்த வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவை அனைத்துமே 'வ' வரிசையில் தொடங்கி வெற்றி பெற்ற படங்கள். இந்த செண்டிமெண்ட் வீரம் படத்திலும் ஒர்க் அவுட் ஆகும் என்று நம்புகின்றனர். மேலும் வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாக வாய்ப்பு இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அஜித்தின் 'வி' செண்டிமெண்ட் கைகொடுக்குமா? Rating: 5 Reviewed By: gg