Latest News
Friday, August 23, 2013

எப்படி இருந்த விக்ரம்... இப்படி ஆயிட்டார்

ஐ படத்தின் கதை மற்றும் விக்ரமின் கெட்டப் குறித்த விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் தான் ஐ படத்தின் கதைக்களம் என்று செய்திகள் கசிந்திருக்கின்றன.
தனது உடல் எடையை பாதியாகக் குறைத்து கொண்டு விக்ரம் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. தனது தோற்றம் வெளியில் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது முக்கியமாக மீடியாக்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைமறைவாக இருந்தார் விக்ரம். அரிசி உணவை தவிர்த்து வெறும் பச்சைக்காய்கறிகள், பழங்கள் என ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு உட்கொண்டு பாதி எடையைக் குறைத்திருக்கிறார்.
பாதி படத்தில் நார்மல் விக்ரமும், மீதிப் பாதியில் ஒல்லிபிச்சான் விக்ரமும் நடிக்கிறார்களாம். உடல் எடைக் குறைப்பினால் ஏற்படும் தோற்ற மாற்றங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்கிறாராம் விக்ரம். அவற்றில் ஒன்று தற்போது லீக்காகி உள்ளது. இதைப் பார்க்கும் அனைவரும் எப்படி இருந்த விக்ரம், இப்படி ஆயிட்டார் என்று மூக்கில் விரலை வைப்பது நிச்சயம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எப்படி இருந்த விக்ரம்... இப்படி ஆயிட்டார் Rating: 5 Reviewed By: gg