Latest News
Friday, August 23, 2013

விழிப்புணர்வு ஏற்படுத்த பைக் பயணம் செய்த அஜித்

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று திருவான்மியூரிலிருந்து தனது புத்தம் புதிய டுகாட்டி பைக்கில் பெங்களூருக்கு சென்றார் அஜித். ரேஸ் செல்லும் போது அணிந்து கொள்ளும் உடை, தலையில் ஹெல்மெட் என அத்தனை பாதுக்காப்பு உபகரணங்களை அணிந்து கொண்ட போதிலும், ரசிகர்கள் அஜித்தை அடையாளம் கண்டு கொண்டனர்.
கடந்த சில நாட்களாக எந்தப் பக்கம் திரும்பினாலும், அஜித் பைக் ஓட்டிய செய்தியைத் தான் கேட்க முடிந்தது. இதற்கிடையில் அஜித் திடீரென பைக் பயணம் செய்தது ஏன் என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. இதற்கு அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு பதிலைக் கூறி அசத்தி இருக்கிறார் தல. பைக் பயணம் குறித்து கூறிய அவர், "இந்த பயணத்தை ஜாலிக்காக மேற்கொள்ளவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடையே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே சென்றேன்" என்றார்.
மேலும் பேசிய அஜித், "ரேஸ் உடை அணிந்து சென்றதால் இது பந்தயத்துக்கான பயணம் இல்லை. என்னை பார்ப்பவர்கள் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள். பாதுகாப்பு உபகரணங்களை வாங்க அதிக செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், விபத்து ஏற்படும் போது வரும் செலவை எண்ணிப் பார்க்க வேண்டும். பாதுகாப்பு உடை அணிந்தால் அதிகமாக வியர்க்கும் என்று சிலர் கூறுவார்கள். விபத்து நேர்ந்து இரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்தினால் பரவாயில்லை" என்றும் கூறினார்.
'தல'யை உயிராக நினைக்கும் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் இந்த செயலைப் பார்த்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள். பாதுகாப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. தலைகவசம் உயிர்க்கவசம் என்பதை அனைவரும் உணர்ந்து நடந்து கொண்டால் ஒவ்வொருவருக்கும் நல்லது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: விழிப்புணர்வு ஏற்படுத்த பைக் பயணம் செய்த அஜித் Rating: 5 Reviewed By: gg