‘ராஜா ராணி’ திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்த சென்னை, சத்யம் திரையரங்கிற்குள் நாம் நுழையும் போதே ஏகப்பட்ட கூட்டம்.
தேடி பிடித்து ஒரு இடத்தில் உட்கார்ந்த நேரத்தில் படத்தின் டிரைலரையும் , பாடலையும் திரையிட்டார்கள். சும்மா சொல்லக் கூடாது….இளமையான , துடிப்பான ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகமானது.
திரையில் நயன்தாராவும், குட்டி நயன்தாராவும் (நஸ்ரியாவும்) (நமக்கு வேண்டியவர்கள் அவர்கள்தானே) அழகோ அழகாக இருந்தார்கள்.
பாடல்கள் முடிந்ததும் கைதட்டல் சத்தம் அதிகமாகவே ஒலித்தது…நம்மைப் போன்றே பலர் ஆவலுடன் வந்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.
பின்னர், ஒவ்வொருவரையாக மேடைக்கு அழைத்துப் பேச வைத்தார்கள். கடைசி வரை படத்தின் ராணிகளான ‘நயன்தாரா, நஸ்ரியா’ அழைக்கப்படவேயில்லை.
வந்தால்தானே அழைப்பதற்கு….என்ன காரணமோ தெரியவில்லை…
போதாததற்கு ஆர்யா வேறு நயன்தாரா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஆயிரம் காளைகள் இருந்தாலும்..அங்கு ஒரு சில மான்கள் துள்ளி விளையாடினால்தானே அழகு…

0 comments:
Post a Comment