Latest News
Thursday, September 5, 2013

நாளை வெளிவருமா மதகஜராஜா

தொடர் பிரச்சினைகள் காரணமாக விஷால் நடிப்பில் நாளை வரவிருந்த மதகஜராஜா மேலும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது. 

மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் டிக்கெட் முன்பதிவையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. விஷால் - அஞ்சலி - வரலட்சுமி - சந்தானம் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதஜகராஜா. 

இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து பல மாதங்களாகியும் வெளியிட முடியாத நிலை. காரணம், ஜெமினி நிறுவனம் இதற்கு முன் வெளியிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்தப் படத்தை வெளியிட முடியாது என விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் படத்தை நடிகர் விஷாலே வாங்கி வெளியிடத் தயாரானார். நாளை உலகம் முழுவதும் 800 பிரிண்டுகள் வரை படத்தை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மதகஜராஜாவுக்கு பைனான்ஸ் செய்தவர்கள், உடனே பணத்தை செட்டில் செய்யுமாறு விஷாலை நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளனர்.


பணம் தராவிட்டால் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டதால், படம் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்தப் படம் வெளியாகவிருந்த திரையரங்குகளில் முன்பதிவையும் நேற்று மாலை நிறுத்திவிட்டனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நாளை வெளிவருமா மதகஜராஜா Rating: 5 Reviewed By: gg