Latest News
Sunday, November 3, 2013

‘புறம்போக்கு’ படதலைப்பை மாற்ற இயக்குனர் ஜனநாதன் முடிவு!

ஆர்யா-விஜய்சேதுபதி இணையும் ‘புறம்போக்கு’ படதலைப்பை மாற்ற இயக்குனர் ஜனநாதன் முடிவு! எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்திற்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இந்த தலைப்புக்கு பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் பிரச்சினை செய்தார். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் செய்தார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மாற்றிக் கொள்ளப் போவதாக இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார். இந்த தலைப்புக்கு பதிலாக கதைக்கு பொருத்தமான வேறு ஒரு தலைப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், லொக்கேஷன் தேர்வு செய்வதற்காக தற்போது இயக்குனர் காஷ்மீருக்கு கிளம்பிப் போயிருக்கிறாராம். லொக்கேஷன் தேர்வான பிறகு படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

தன்னுடைய படங்களில் சமூக கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லிய ஜனநாதன், ஆர்யா, விஜய் சேதுபதி என இருபெரும் முன்னணி ஹீரோக்களை வைத்து எந்த மாதிரியான படத்தை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அனைவர் மத்தியிலும் தொற்றிக் கொண்டுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ‘புறம்போக்கு’ படதலைப்பை மாற்ற இயக்குனர் ஜனநாதன் முடிவு! Rating: 5 Reviewed By: gg