Latest News
Sunday, November 3, 2013

ஹீல்ஸ் காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு 14வது மாடி வரை படியேறிய தமன்னா.

தமன்னா நடிக்கும் புதிய இந்தி படம் ‘ஹம்சகல்ஸ்‘. இதில் சயீப் அலிகான் ஹீரோவாக நடிக்கிறார். சாஜித் கான் டைரக்டு செய்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்தது. இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவு துறை அலுவலகம் அமைந்துள்ள ‘எம் 16 பில்டிங்கில்‘ ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. முதலில் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைக்கவில்லை. பிறகு இயக்குனர் சாஜித் தனக்கு தெரிந்த உயர் அதிகாரிகளை நாடினார். அவர்கள் சிபாரிசு செய்ததன் அடிப்படையில் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் நடத்திக்கொள்ள பர்மிஷன் கிடைத்தது.
ஷூட்டிங் நடந்த தினத்தில் அங்குள்ள ‘லிப்ட்‘களில் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் லிப்ட் இயங்கவில்லை. 14வது மாடியில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தமன்னா, இஷா, பிபாஸா, சயீப், சாஜித் உள்பட பட குழுவினர் அனைவரும் 14வது மாடிவரை படியிலேயே நடந்து சென்றனர். நடிகைகள் தாங்கள் அணிந்திருந்த ஹீல்ஸ் காலணிகளை கையில் வைத்துக்கொண்டு வெறும்காலில் நடந்து சென்றது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஹீல்ஸ் காலணிகளை கையில் எடுத்துக்கொண்டு 14வது மாடி வரை படியேறிய தமன்னா. Rating: 5 Reviewed By: gg