Latest News
Tuesday, May 10, 2016

நரம்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும் 11 உணவுகள்!

நரம்பு மண்டலும் நமது உடலில் முக்கிய பணியாற்றி வருகிறது. இது தான் அறிவாற்றல் மற்றும் உடலின் முக்கிய இயக்கங்களை கட்டுப்படுத்துகிறது. சிலர் எப்போதும் சோர்வாக இருப்பார்கள். எதையும் புதியதாய் அறிந்துக் கொள்ள, கற்றுக்கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள்.

உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

இதற்கு காரணம் அவர்களது நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் அழுத்தம் மற்றும் சோர்வு தான். இதை சரி செய்ய, சீரான முறையில் உடற்பயிற்சியும், சில உணவுகளை உட்கொள்ளவும் வேண்டும். சரியான ஊட்டச்சத்துக்கள் இன்றி உங்களது நரம்பு மண்டலத்தை நீங்கள் சரி செய்ய முடியாது.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 அதிகம். இவை, ஹோமோசைஸ்டீன் உண்டாகாமல் தடுக்கிறது. இந்த ஹோமோசைஸ்டீன் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் உண்டாக்கக் கூடியது ஆகும். மேலும் இது அல்சைமர் மறதி நோய் உண்டாகாமலும், தமனிகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின் பி1 மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இவை, மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கிறது. மேலும், சீரான முறையில் உணவில் பசலைக்கீரை சேர்த்து வந்தால், நரம்பு மண்டலத்தின் வலிமை அதிகரிக்கும்.

கொக்கோ

கொக்கோவில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இது பார்கின்சன் நோய், மயக்கம், பெருந்தமனி தடிப்பு போன்றவை உண்டாகாமல் தடுக்கிறது. மேலும், இது மூளைக்கு செல்லும் விஷத்தன்மையை குறைக்கிறது. இதனால், நரம்பு மண்டலம் நீண்டநாள் பாதிப்பு ஏதும் ஏற்படலாமல் வலிமையாக செயற்படும்.

முழு தானியங்கள்

முழு தானியங்களில் வைட்டமின் பி6 இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. இது மூளையின் செயற்திறனை அதிகரிக்கிறது. மேலும், இதில் இருக்கும் மெக்னீசியம் அறிவாற்றலை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்க முழு தானியங்கள் சிறந்த உணவாகும்.

நட்ஸ்

பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இயற்கை ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகம். இவை, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளையின் செயலாற்றலையும் அதிகரிக்க செய்கிறது.

பூண்டு

பூண்டு, இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயனளிக்கும் உணவு. இதனால், மூளைக்கு ஏற்படும் அழுத்தம் குறைகிறது. மேலும், இதன் செயற்திறன் உடல் செல்களின் வயதாகும் தன்மையை குறைத்து சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மேலும், இதனால், நரம்பு மண்டலத்தில் வலுவிழப்பு உண்டாகாமல் தடுக்க முடியும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் பாலிஃபினல் கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், நரம்பு மண்டலத்தில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய், அறிவாற்றல் மற்றும் மூளையின் செயற்திறனை அதிகரிக்க உதவுகிறது.

ரெட் ஒயின்

மது அருந்துவதற்கு பதிலாக ரெட் ஒயின் அருந்துவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் குடிப்பது மூளையின் செயற்திறன் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயலாற்றலை அதிகரிக்க செய்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கடல் மீன்கள்

கடல் மீன்களான சூரை, நெத்தலி போன்றவற்றில் மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் போன்றவை அதிகம். இவை, மூளையின் செயலாற்றலை ஊக்குவிக்கும் உணவாகும்.

மோர்

மோர் உடற்சக்தியை ஊக்குவிப்பது மட்டுமின்றி, மனநிலை மேலோங்கவும், நரம்பு மண்டலும் நன்கு செயற்படவும் கூட உதவுகிறது.

Let's block ads! (Why?)



http://ift.tt/1s9hQmM
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நரம்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும் 11 உணவுகள்! Rating: 5 Reviewed By: Unknown