பீப் பாடலால் சர்ச்சையால் சின்னாபின்னமான இமேஜை சீர் செய்யும் முயற்சியில் சிம்பு இறங்கியுள்ளார் ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல் ஒன்றை உருவாகிவருகிறார்.அந்த பாடலிலிருந்து சில வரிகள் இப்போது வெளியாகியுள்ளது.
ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
0 comments:
Post a Comment