நாசர் தலைமையிலான விஷால், கார்த்தி உள்ளிட்ட இளம் பட்டாளம் கொண்ட நடிகர் சங்கம் தற்போது ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, நாடக நடிகர்களுக்கு பல்வேறு உதவிகள், நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் போன்ற முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முன்னால் நடிகர் சங்கத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும் ஆனா புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் நூற்றாண்டு விழா வருகிறது. இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாட நடிகர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


0 comments:
Post a Comment