பாதுகாப்பற்ற உடல் உறவே பால்வினை நோய்கள் வருவதற்கு மிகமுக்கிய காரணமாக இருக்கின்றன.. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவை இந்த நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் ஆகும். இவற்றால் பல்வேறு பால்வினை நோய்கள் வருகின்றன.
இந்த பால்வினை நோய்கள் அனைத்தையும் 5 விதமான அறிகுறிகள் மூலம் அறியலாம் பிறப்புறுப்புப்புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண் இருவருக்கும் வரும்.
ஆண்களுக்கு விதைப்பை வீக்கமும் வலியும் பால்வினை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அடிவயிற்றில் தொடர்ச்சியான வலி பெண்களுக்கு தொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாக இருக்கலாம்.
பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் அசாதாரணப்போக்கும் ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோ வெளிப்படும்.
பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு ஒழுக்கு வெளிப்பட்டு துணிகள் கறை படியுமானால் அது பால்வினை நோயின் அறிகுறியாகும். கவட்டியில் நெறிகட்டுதல் ஆண், பெண் இரு பாலருக்கும் கவட்டியில் அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில் நெறி கட்டுதல். இது மிகவும் வலியினை ஏற்படுத்தும்.
உடலுறவின் போது எப்போதும் மிகுந்த வலி ஏற்படுமானால் அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியே ஆகும். இதில் ஒரு சில அறிகுறிகள் வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.


0 comments:
Post a Comment